ஆவின்பால் புதிய விலை குறைப்பு பட்டியல் வௌியிடு….

167
Spread the love

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆவின் பால் விலை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் குறைத்து உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து புதிய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்….
தமிழக அரசு அரசாணைக்கு ஏற்ப  பொதுமக்கள் ஆவின் பார்லர்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேரடியாக 16.5.2021 முதல் ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு மூன்று  ரூபாய் குறைத்து பெற்றுக்கொள்ளலாம்.

சென்னையில் பால் அட்டைதாரருக்கு 16ம்  தேதி முதல் அடுத்த மாதம் 15ம் தேதி வரை வழங்கப்படும். 16ம் தேதி முதல் பால் அட்டை விலை குறைப்பு பட்டியல் அமலுக்கு வருகிறது.பொது மக்களுக்கு பால் விநியோகம் தங்கு  தடையின்றி நடைபெறுவதை கண்காணிக்க 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் ஆவின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.   ஆவின் பால் விநியோகம் பற்றிய தகவல்களுக்கு  சென்னையை பொறுத்தவரை பொது  மக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்- 1800 425 3300,      044-23464575, 23464576, 23464578 ஆகும். மேலும் விவரத்துக்கு பொது மேலாளர்களை தொடர்பு கொள்ளும்படி ஆவின் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.

LEAVE A REPLY