ரஜினிக்கு “வாய்ஸ்”… தயாராகும் விஜய்…

9582
Spread the love
 

தனது தந்தை சந்திரசேகரன் திடீரென அரசியல் கட்சியை பதிவு செய்ததால் ஏற்பட்ட குழப்பத்தால் கடந்த மாதம் முடிவு செய்திருந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடனான ரகசிய ஆலோசனையை தற்போது நடத்தி முடித்திருக்கிறார் நடிகர்  விஜய்.  தன்னுடைய பனையூர் பண்ணை வீட்டில் பொறுப்பாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் 2 நாட்களாக நடந்த கூட்டத்தில், 30க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். 

நிர்வாகிகளிடையே பேசிய விஜய், நமது இயக்க நிர்வாகிகள் யாரும் வேறு கட்சிகளில் சேரவோ, பணியாற்றவோ கூடாது. இந்த தேர்தலில் நாமும் முக்கிய பங்கேற்கப்போகிறோம்.. ; நீங்கள் நினைத்தது போல் அனைத்தும் விரைவில் நடக்கும் என பொடி வைத்து பேசியிருக்கிறார்.. ஏற்கனவே கொரோனாவிற்கு முன்னர் நிர்வாகிகளிடம் பேசிய விஜய்.. நான் ஒருவரை எதிர்பார்த்திருக்கிறேன்… அவர் வந்து விட்டால் நாமும் அரசியல் பணியினை துவக்கலாம் என சூசகமாக கூறியிருந்தார். தற்போதும் நடிகர் விஜய் அரசியல் பணி என குறிப்பிடுவது ரஜினியின் புதிய கட்சியாக இருக்கலாம் என்றும் அவருக்கு நடிகர் விஜய் ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு உள்ளதாக அவரது மன்ற நிர்வாகிகள் கூறுகின்றனர்..

LEAVE A REPLY