விவேக் குடும்பத்தினர் கொடுத்த …” பளார் “

1348
Spread the love

நடிகர் விவேக் மரணம் திடீரென சர்ச்சையாக்கப்பட்டு வந்தது. காரணம் முதல்நாள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அவருக்கு அடுத்த  நாள் ஏற்பட்ட மாரடைப்பும் சிகிச்சை பலன் அளிக்காமல் ஏற்பட்ட மரணமும் தான்.. டாக்டர்கள் எவ்வளவு விளக்கம் கூறியும் ஒரு சிலரின் வாயை மூட முடியவில்லை.. இவ்வளவு ஏன் தடுப்பூசி போட்டுக்கொண்ட அரசியல் பிரமுகர்கள் கூட விமர்சனம் செய்து விட்டு தான் போனார்கள்.. இந்த நிலையில் நேற்று மாலை விவேக் குடும்பத்தினர் விருகம்பாக்கத்தில் உள்ள அவர்களது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்திக்கப்போவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.. நல்லத்தீனி என்பது போல் சுமார் 200க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள்.. லைவ் யூனிட்டுடன் குவிந்தனர்..

பத்திரிக்கையாளர்கள் வந்து விட்டனர் என தகவல் தெரிவிக்கப்பட்டதும்.. விவேக்கின் மனைவி அருட்செல்வி, மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி, மைத்துனர் செல்வகுமார் மற்றும் குடும்பத்தினர் வந்த அமர்ந்தனர்.. பேசலாமா என்பது போல் விவேக்கின் மனைவி பார்க்க ஒகே மேடம்.. ஒகே மேடம். என்கிற சத்தங்களுக்கு இடையே பிரஸ் மீட் ஆரம்பித்தது.. எங்களுக்கு பக்கபலமாக இருந்த மத்திய அரசுகளுக்கு நன்றி. அரசு மரியாதை அளித்ததற்கு மிக்க நன்றி.. இறுதி வரை எங்களுடன் இருந்த காவல் துறையினர், ஊடகத்தினருக்கு நன்றி. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற கோடான கோடி ரசிகர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என விவேக்கின் மனைவி அருட்செல்வி பேசி முடிக்க மகள்கள் கைகூப்பி நன்றி சில நொடிகள் எழுந்து நின்றனர்.. மேடம் மேடம் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்ட ஆரம்பிக்க எதையும் காதில் வாங்காமல் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.. விவேக்கின் மனைவியும் மகள்களும்.. யாரும் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு 45 விநாடிகளில் முடிந்தது பிரஸ்மீட்..உப்புசப்பு இல்லாமல் பொசுக்குனு பிரஸ்மீட் முடிந்ததில் மீடியாக்களுக்கு பெரிய ஏமாற்றம்… ஏற்கனவே எஸ்பிபி மரணத்தின் போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினருடன் எஸ்பிபி சரண் கலந்து கொண்ட பிரஸ்மீட்டில் ஏடாகூடமாக கேட்கப்பட்ட கேள்வியின்போது  ‘ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை.. அப்பா இறந்தது பத்தி உங்களுக்கு கவலை இல்லையா? ’.. என வருதத்துடன் பத்திரிக்கையாளர்களை பார்த்துகேள்வி கேட்டார் சரண்.. அந்த வகையில் விவேக் குடும்பத்தினர் மீடியாக்களுக்கு சரியான “பளார்” கொடுத்தனர் என்றே சொல்ல வேண்டும்..   

LEAVE A REPLY