Skip to content

தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை… — தமிழக பட்ஜெட் 2026: புதிய தொழில் கொள்கை அறிவிப்பு… தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை…

மும்பையில் அதிரடி: ரூ. 1,745 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்

நாடு முழுவதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் 349 கிலோ எடையுள்ள உயர்தர போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ. 1 ஆயிரத்து 745 கோடி ஆகும். சிறிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையின்போது மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல் சிக்கியுள்ளது.
இந்த போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமை விசாரணை நடத்தி வருகிறது. ரூ. 1 ஆயிரத்து 745 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகளுக்கு உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!