எனக்கு அந்த நகரில் தான் திருமணம்… த்ரிஷா

182

தற்போது த்ரிஷா படங்களில் பிசியாக உள்ளார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் சேர்ந்து ராம் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் த்ரிஷா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்பொழுது அவர் அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

த்ரிஷா அளித்த பதிலை பார்த்த ரசிகர்கள், இடம் ரெடி, கல்யாணப் பெண்ணும் ரெடி, மாப்பிள்ளை யாரோ என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதே சமயம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லையா என்று கேட்க பெரிதாக இல்லை என்று தெரிவித்துள்ளார் த்ரிஷா.

விலங்குகள், உணவு மற்றும் படங்கள் தான் தன்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளதாக த்ரிஷா கூறியுள்ளார். த்ரில்லர் படங்களை பார்க்க பிடிக்குமாம். ஆனால் காதல் கதைகளில் நடிக்கப் பிடிக்குமாம் த்ரிஷாவுக்கு. பிரபலமாக இருப்பதால் என்ன மைனஸ் என்று கேட்டதற்கு, சில சமயம் ஓங்கி குத்த வேண்டும் என்று தோன்றும்போது கூட நல்லபடியாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. அடித்தால் பேப்பரில் வந்துவிடுமே என்று தெரிவித்துள்ளார் த்ரிஷா.

LEAVE A REPLY