திருச்சியில் ஆடி 18 கும்மி அடித்து கொண்டாட்டம்…..

134
Spread the love

ஆடிப்பெருக்கு என்றாலே காவிரி கரையில் கூட்டம் ததும்பி நிற்கும். புதுமணத்தம்பதிகள் தாலிபிரித்து  கட்டி கொள்ளுதல், மாங்கல்யம் நிலைக்க வேண்டி பெண்கள் வழிபாடு என காவிரி கரை முழுவதும் மங்களகரமாக காட்சி அளிக்கும். ஆனால் கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கொரோனா பரவல் காரணமாக ஆடி 18

பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகள் கொண்டாட்டம் இன்றி காணப்பட்டது. அரசு தடை விதித்தாலும் பாரம்பரிய சடங்குகளை விட முடியுமா என்பது போல ஆங்காங்கு காவிரி கரையோரம் ஆடி 18 சடங்குகளை செய்து விட்டு சென்றனர். இதன் ஒரு பகுதியாக காவிரி கரையோரம்

வசிக்கும் ஜியபுரம் பகுதி பொதுமக்கள் காவிரி கரைக்கு வந்து முளை பாரியுடன் படையல் வைத்தனர். பின்னர் பெண்கள் மஞ்சள் கயிறு அணிந்து கொண்டு தாலியை படையலில் வைத்து சிறப்பு பூஜை செய்தனர். அதனை தொடர்ந்து

 

முளைபாரியை சுற்றி கும்மி அடித்து ஆடிப்பாடினர். அதன் பின்னர் படையலை காவிரி தாய்க்கு அர்ப்பணித்தனர். 

LEAVE A REPLY