சட்டப்பேரவை துவங்கியது… 1 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

142
Spread the love

தமிழக சட்டமன்றக் கூட்டத் தொடா் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மறைந்த அவை உறுப்பினர்களுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின் திங்கட்கிழமைக்கு (1 ஆம் தேதிக்கு) அவை ஒத்திவைக்கப்பட்டது. சபாநாயகா் தனபால் மீது எதிா்க்கட்சித் தலைவா் மு.க.ஸ்டாலின் அளித்த நம்பிக்கை இல்லா தீா்மானத்தை வலியுறுத்தப்போவதில்லை என்று சபாநாயகரிடம் திமுக சார்பில் இன்று கடிதம் அளிக்கப்பட்டது.

இது குறித்து பின்னர் பேட்டி அளித்த ஸ்டாலின் அன்றைய சூழ்நிலையில் நாங்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை அளித்தோம். ஆனால் தற்போதைக்கு இது தேவையில்லை என்பதால் இதை நாங்கள் வலியுறுத்தப்போவதில்லை. இது குறித்து சபாநாயகரிடமும் தெரிவித்து விட்டோம் என்றார்.

LEAVE A REPLY