அதிமுக ஆரம்பித்தது ஏன்? எம்ஜிஆர் சொன்ன விளக்கம்…

296
Spread the love

தமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்க முடியாத நாள். அன்றுதான் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். நீக்கப்பட்ட ஒருவாரத்தில் அதிமுக என்ற புதிய கட்சியை தொடங்கினார் எம்.ஜி.ஆர். இன்று அக்கட்சி தொடங்கப்பட்ட 46-வது ஆண்டு தினம். 

1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ம் தேதி சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில் எம்ஜிஆர் பேசிய பேச்சு…

‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே! கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. 
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?

அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்கு காட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது? ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது?  நீ முறையாக சம்பாதித்தால்  கணக்குக் காட்டு!.இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன். இவ்வாறு பேசிய பேச்சுதான் அன்று புயலை கிளப்பி அதிமுக உருவாக காரணமானது.

LEAVE A REPLY