உள்ளாட்சி தேர்தல்…அதிமுக ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து….

90
Spread the love

உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோரை அழைத்து ஆலோசனை நடத்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் முடிவு செய்தனர். இந்த ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இன்று காலை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.  

இதையொட்டி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் சாமியானா பந்தல் போட்டு, நாற்காலிகளை சமூக இடைவெளியில் அமைத்து ஏற்பாடு செய்து இருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வெளியூர்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள் நேற்று மாலையே சென்னை வந்தனர்.

ஆனால் நேற்று இரவு திடீரென அதிமுக ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.  அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டது இன்று காலையில்தான் முக்கிய நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. அவர்கள் இதை கேட்டு ஆச்சரியம் அடைந்தனர். கூட்டத்துக்கு செல்வதற்கு தயாராக இருந்த பலரும் எதற்காக கூட்டம் ரத்து ஆனது என்பது புரியாமல் உள்ளனர்.

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணை அறிவிக்கப்பட்ட பிறகு அ.தி.மு.க. தரப்பில் கூட்டம் நடத்தி முடிவுகளை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பு சில ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை வகுக்க அதிமுக  மூத்த தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

LEAVE A REPLY