ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து தெற்கு மாவட்ட திமுக ஆலோசனை…

157
Spread the love

விவசாயிகள் மற்றும் சிறு வணிகர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் வகையில், பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் – துணைபோன அதிமுக அரசை கண்டித்தும், திருச்சி தெற்கு மாவட்டத்தில் நடத்தும் அறப்போராட்டம் குறித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி போராட்ட ஆயத்த கூட்டம் திருச்சி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.  இந்தக் கூட்டத்தில், கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் 21ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு விரோதமாக பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள 3 சட்டங்கள் குறித்து அனைத்து கட்சி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு மாவட்ட தலைநகரம், ஒன்றியம், நகரம், பேரூர் வாரியாக விவசாயிகள் மற்றும் வர்த்தகர்களை பெருமளவில் பங்கேற்க செய்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை செப்28ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு நடத்த தீர்மானித்தபடி, திருச்சி தெற்கு மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து திருச்சி தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் வாரியாக கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

LEAVE A REPLY