உள்ளாட்சி..அதிமுக மா.செ.தான் முழு அதிகாரம்

406
Spread the love

உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து திமுக உள்ளிட்ட 5 கட்சிகள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 2011 மக்கள் தொகை அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையில்லை என்று உத்தரவிட்டனர். இந்நிலையில் ஏற்கனவே கூட்டணி கட்சிகளுடன் முதற்கட்ட ஆலோசனையை அதிமுக நடத்தியிருந்தது.

இந்நிலையில் இன்று அதிமுக தலைமை  தெரிவித்துள்ளதாவது; இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு இட ஒதுக்கீட்டை அந்தந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி ஒதுக்கலாம். அவர்கள் கேட்கும் இடங்கள் குறித்து பட்டியல் பெற்று இதில் பிரச்னை ஏற்படாமல் பேச்சுவார்த்தையை நடத்தி இடங்களை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

LEAVE A REPLY