ஓபிஎஸ்சை வரவேற்க தயங்கிய அமைச்சர்கள் ?

526

அமெரிக்கா டூரை முடித்து விட்டு நேற்றிரவு சென்னை வந்தார் ஓபிஎஸ். அவரை வரவேற்க அமைச்சர் பாண்டியராஜன் மட்டுமே சென்றிருந்த விவகாரம் அதிமுகவில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர் எடப்பாடி வெளிநாடு பயணத்தை முடித்து விட்டு வந்த போது அமைச்சர்கள், அதிகாரிகள் என கிட்டத்தட்ட அனைவரும் வரவேற்பு அளித்தனர்.

ஆனால் நேற்றைய தினம் அதிகாரிகள் யாரும் செல்லவில்லை. மேலும் அமைச்சரவை கூட்டத்திற்காக அமைச்சர்கள் அனைவரும் சென்னையில் இருந்த நிலையில் மாபா பாண்டியராஜன் மட்டுமே விமான நிலையம் சென்று இருந்தார். ஓபிஎஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், உதயகுமார் ஆகியோர் மட்டுமே சென்றிருந்தனர். இந்த விஷயத்தில் எடப்பாடி கோபித்துக் கொள்ளக்கூடாது என நினைத்து பல அமைச்சர்கள் ஓபிஎஸ்சை வரவேற்க விமானநிலையம் செல்லவில்லை என அதிமுகவில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. 

LEAVE A REPLY