அமைச்சர் வளர்மதி அரியலூருக்கு தூக்கி அடிக்கப்பட்டது ஏன்?

1053

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினரிடம் இருந்து விருப்ப மனு வாங்குவதற்காக மாவட்டம் வாரியாக நிர்வாகிகளின் பட்டியலை அதிமுக  தலைமை வெளியிட்டுள்ளது. திருச்சி மாநகர் மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட செயலாளர் குமார், அமைப்புச்செயலாளர் பரஞ்சோதி, அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆகியோரும், புறநகர் மாவட்டத்தை பொருத்தவரை அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர் தாடி ராசு, எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சிவபதி, கொள்கை பரப்புத்துணை செயலாளர் பேராசிரியர் பொன்னுசாமி, புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல் ஆகியோரும் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்வார்கள் என அதிமுக தலைமை பெயர்களை அறிவித்துள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால் திருச்சி அமைச்சர் வளர்மதி திருச்சி மாவட்டத்தில் கழட்டி விடப்பட்டு அரியலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிமுக நிர்வாகி ஒருவர் கூறுகையில் திருச்சியில் அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் கட்சி கட்டுப்பாட்டை குலைக்கும் வகையில் தனி கோஷ்டியாக செயல்படுவதாக உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளது. குறிப்பாக திருச்சி ஆவின் சேர்மனும் மாணவரணி செயலாளருமான  கார்த்திகேயனும், அமைச்சர் வளர்மதியும் சேர்ந்து நாங்குநேரியில் பிரச்சாரத்தின் தனியாக செயல்பட்டதாக கட்சி மேலிடத்திற்கு கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே வளர்மதி அரியலூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. 

LEAVE A REPLY