சுனிலுக்கு வலை வீசும் அதிமுக.. திமுக அதிர்ச்சி

589

கடந்த 2014ம் ஆண்டில் இருந்து திமுகவின் அரசியல் செயல்பாடுகள் மற்றும் ஸ்டாலினின் அணுகுமுறையினை வடிவமைத்தது ஒஎம்ஜி என்கிற தனியார் நிறுவனம் தான். இதன் தலைவராக இருப்பவர் சுனில். திருவண்ணாலையைச் சேர்ந்த சுனில் இந்திய அளவில் மோடி, நிதிஷ்குமார், ஜெகன்மோகன் ரெட்டி தற்போது மம்தா ஆகியோரின் அரசியல் செயல்பாடுகளை வடிமைக்கும் ஐபேக் என்கிற நிறுவனத்தின் தலைவராக இருக்கும் பிரசாந்த் கிஷோரின் டீமில் இருந்தவர். கடந்த 5 வருடகாலமாக திமுகவின் அரசியல் அணுகுமுறைகளில் முக்கியப்பங்காற்றிய சுனில் கடந்த சில நாட்களுக்குமுன்பு தனது காண்டிராக்ட்டை முடித்துக்கொண்டார். ஸ்டாலின் மருமகன் சபரீசன் தலையீடு காரணமாக சுனில் வெளியேறி விட்டதாக திமுக நிர்வாகிகள் கூறும் நிலையில் திமுக தரப்பில் பிரசாந்த் கிஷோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் வரும் காலங்களில் பிரசாந்த் கிஷோருடன் இணைந்து செயல்பாடுமாறு சுனில் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அவர் ஏற்றுக்கொள்ளாமல் வெளியேறி விட்டதாகவும் ஓரு தகவல் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஓஎம்ஜி நிறுவனம் தலைவர் சுனிலை தங்களது அரசியல் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ள அதிமுக விரும்புவதாகவும் இதன் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக திமுகவின் பிளஸ் மற்றும் மைனஸ் அனைத்தும் தெரிந்த ஓஎம்ஜி நிறுவனத்தை பயன்படுத்திக்கொண்டால் ஒரு வருடகாலத்திற்கு பின் வரவுள்ள சட்டமன்ற தேர்தல் பணிகளில் எளிதாக இருக்கும் என அதிமுக நினைப்பதாக தெரிகிறது. இது தொடர்பாக உளவுத்துறை அதிகாரிகள் மூலம் அதிமுக தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் சுனில் தரப்பை பொறுத்தவரை இதுவரையில் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என தெரிகிறது.. அதிமுகவின் இந்த மூவ்  திமுக தரப்பிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.. 

LEAVE A REPLY