கட்சி பதவிக்கு நேர்காணல்..”புது டிரண்ட்” அசத்தும் அதிமுக மா.செ குமார்..

219
Spread the love

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் அதிமுகவில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஒன்றியங்கள் மற்றும் பகுதிகள் பிரிக்கப்பட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் மாவட்ட செயலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளர் குமார் புதிய பதவியிடங்களுக்கான நிர்வாகிகளை நியமிக்க நேர்க்காணல் நடத்தி வருகிறார்.  தெற்கு மாவட்ட அதிமுகவிற்கு திருவெறும்பூர், மணப்பாறை, லால்குடி சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள நகரம் மற்றும் ஒன்றியங்களை பிரிக்கும் பணியினை முடித்துள்ள மாவட்ட செயலாளர் குமார், அங்குள்ள எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து ஒவ்வொரு பதவிக்கும் 3 நபர்களை முடிவு செய்து அவர்களை நேரில் அழைத்து நேர்க்காணல் நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று மணப்பாறை தொகுதிக்கான புதிய ஒன்றியப்பதவியிடங்களுக்கான நேர்க்காணல் நடைபெற்று வருகிறது. திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் குமாரின் இந்த புதிய டிரண்ட் கட்சியினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.. 

LEAVE A REPLY