அதிமுக கூட்டணியில், பாமகவிற்கு 23 சீட்…….- நடந்தது என்ன….?

554
Spread the love

அதிமுக-பாமக தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தை நடைபெற்றது. இது குறித்த செய்தியாளர் சந்திப்பு கூட்டம் சென்னை பட்டினம்பாக்கம் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம், பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அதிமுக கூட்டணியில் பாமக 23 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார், தங்கமணி, விஜயபாஸ்கர்,செம்மலை, சி.வி.சண்முகம், திண்டுக்கல் சீனிவாசன், மா.பா.பாண்டியராஜன், ஆர்.வி.உதயகுமார், வைகை செல்வன், எம்.பி. முனுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். 

LEAVE A REPLY