அமமுகவை பாத்து பயப்படுறாரா வைத்தி ?… அதிமுகவில் சலசலப்பு

327
Spread the love

உள்ளாட்சித்தேர்தல் தொடர்பான அதிமுக ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ், அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வைத்தியலிங்கம், கேபி முனுசாமி ஆகியோர் பேசினர். முதலில் பேசிய 4 பேரும் இடைத்தேர்தல் அதிமுக வெற்றியை பாராட்டியும் இதன் காரணமாக இணைந்து செயல்பட்டால் உள்ளாட்சியில் வெற்றி பெறலாம் என கூறி பேசினர். ஆனால் கடைசியில் நன்றி உரையாற்றிய வைத்திலிங்கம் பேசிய வார்த்தைகள் தான் அதிமுக முண்ணனி நிர்வாகிகள் பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காரணம் வைத்தியலிங்கம் உள்ளாட்சித் தேர்தலை தள்ளிப்போடுங்கள் என பேசியது தான்.  வைத்தியலிங்கம் பேசியவற்றில் முக்கியமானவை  ‘ உள்ளாட்சித் தேர்தல் வந்தா நாம பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் இட ஒதுக்கீடு போக மிச்சமிருக்கிற இடங்கள்ல போட்டியிடுவதுல நமக்கே நிறைய போட்டி ஏற்படும். கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்து கொடுக்கும் போது இன்னும் பல சிக்கல்கள் வரும். நம்ம கட்சியிலேயே என் ஆதரவாளர் உன் ஆதரவாளர் என்ற பேச்சும் வரும். அதோட தொண்டர்கள் சோர்வாக தான் இருக்கிறார்கள். இதையெல்லாம் வச்சு என்னோட தனிப்பட்ட கருத்து என்னன்னு கேட்டா சட்டமன்ற தேர்தலில் நாம ஜெயிக்கணும்னா உள்ளாட்சித் தேர்தலை எப்பாடுபட்டாவது சட்டமன்ற தேர்தல் வரைக்கும் ஒத்தி வைக்க வேண்டும். இல்லையென்றால் இந்த தேர்தலில் நமது கூட்டணி கட்சிகளுக்கும் நமக்கும் ஏற்படும் முரண்பாடுகளை எதிர்க்கட்சியினர் பெரிசாக்கி சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கு என்று பலரும் ஆச்சர்யப்படும் வகையில் பேசினார் வைத்தியலிங்கம். 

அண்ணனுக்கு என்ன ஆச்சு? ஏன் அப்படி பேசினார் என நிர்வாகிகளிடம் கேட்டதற்கு‘ டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் அதிமுகவுக்கு இணையாக ]அமமுகவுக்கு இப்போதும் செல்வாக்கு  இருக்கு. உள்ளாட்சித்தேர்தலில் அமமுக போட்டியிட்டால் டெல்டா மாவட்டங்களில் அதிமுக வெற்றி என்பது கேள்விக்குறி தான். இந்த நிலை வைத்தியலிங்கம் மட்டுமல்லாது காமராஜ், ஓஎஸ் மணியன் ஆகியோருக்கும் தெரியும். இதை மனதில் வைத்து தான் வைத்தியலிங்கம் அண்ணன் பேசினார் என்கின்றனர் வைத்தியலிங்கம் ஆதரவாளர்கள்… 

LEAVE A REPLY