இது அந்தரங்கம் (Adults Only)….

809

பல ஆண்கள் எல்லாவற்றையும் தெளிவாக வெளியே சொல்வதில்லை. பெரும்பாலனோர் பெண்கள் என்ன நினைப்பார்கள் என்று மறைத்து வைத்துக் கொள்கின்றனர். நீங்கள் அதைக் கேட்டால் எப்படி நடந்து கொள்வீர்கள் என்று பதட்டமாக இருப்பார்கள். எனவே அவர் சொல்ல வருவதால் நீங்கள் எந்த பாதிப்பும் அடைய மாட்டீர்கள் என்பதை வெளிப்படுத்துங்கள். ஆண்களின் பயம் குறைந்து விடும்.

உறவில் நம்பிக்கை என்பது மிகவும் முக்கியம். இது இருவருக்கும் வேண்டும். இல்லையென்றால் தேவையில்லாத சந்தேகங்கள் எழுந்து உறவை சீர்குலைக்க ஆரம்பித்து விடும். எனவே உறவில் அடிக்கடி நான் உன்னை நம்புகிறேன் என்ற வார்த்தையை கூறுங்கள். இது அவர்களை நம்பிக்கையாக இருக்க வைக்கும். இந்த மாதிரியான உறுதியளிக்கும் சொற்கள் உங்க துணையை நிம்மதியடையச் செய்யும். இப்படி சொல்லும் போது அவரும் உங்க மீது சந்தேகம் கொள்ளாமல் இருவருக்கும் இடையே நம்பிக்கை ஏற்படும். அதே மாதிரி நீ என்னை நம்பலாம் என்ற நம்பிக்கை வாக்குறுதியையும் அவர்களுக்கு கொடுங்கள்.

ஒரு ஹோட்டலுக்கு சென்றால் கூட சாப்பாடு பரிமாறுபவர்களுக்கு நன்றி சொல்கிறோம். உங்களுக்காக வீட்டில் சமைத்து தருவது, உங்க மருந்து மாத்திரைகளை எடுத்து தருவது என்று சில வேலைகளை உங்க கணவர் உங்களுக்காக செய்கிறார்கள் என்றால் அதையெல்லாம் நினைத்து பாருங்கள். அதை மதிக்க பழகுங்கள். கருணையுடன் நன்றி கூற பழகுங்கள். இது உங்க துணைக்கு சந்தோஷத்தை கொடுக்கும். மறுபடியும் உங்களுக்கு என்று வேலை, அக்கறை செய்ய ஈடுபடுத்தும்.

மரியாதை என்பது மிகவும் முக்கியமானது. எல்லாருக்கும் அது தேவை. ஆண்கள் எப்படி தாங்கள் வேலை செய்யும் இடங்களில், நண்பர்களிடத்தில், உறவினர்களிடத்தில் மதிக்கப்படுகிறார்களோ அதே மாதிரி உங்களிடமும் மரியாதை எதிர்ப்பார்ப்பார்கள். எனவே உங்களுக்காக உங்க அன்புக்காக ஏங்கும் உறவை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். நான் உன்னை மதிக்கிறேன் என்று அவர்களிடம் கூறுங்கள். இந்த அம்சங்கள் இல்லாமல் உண்மையான காதல் இருக்க முடியாது.

ஆண்கள் புதிய தொழில் தொடங்கலாம், புதிய உடற்பயிற்சி மேற்கொள்ளுவது, புதிய வேலையை திறம்பட செய்தல் இவற்றையெல்லாம் செய்யும் போது துணையாக ஆதரவு கொடுப்பது முக்கியம். உங்க ஆதரவு இருந்தால் அவர் சோர்ந்து போகும் போது கூட எழ முடியும். பக்க பலமாக இருக்கும் போது வெற்றி பெற முடியும். துணை இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும்.

துணை ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ள முற்பட வேண்டும். ஆண்கள் நல்ல கணவராக பொறுப்பாக வீட்டை பார்த்து கொண்டால் அவரின் செயல்களை பாராட்டுங்கள். அதே மாதிரி உங்க மனைவியோ காதலியோ உங்களுக்காக எதாவது செய்யும் போது அவர்கள் செய்த வேலைகள் வெற்றி அடைந்தால் பாராட்டுங்கள். இது அவர்களை மேலும் உற்சாகப்படுத்தி முன்னேற்ற பாதைக்கு வழி நடத்தும்.

LEAVE A REPLY