இது அந்தரங்கம் (Adults Only)

593
உங்கள் விந்தணுக்கள் தரம் உங்களால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது. எனவே உங்கள் பழக்கங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
ஆனால் கருத்தரிக்கும் தன்மை உங்களுக்கு இல்லையென்றால் நீங்கள் மட்டுமே காரணம் இல்லை. சங்கிலித் தொடராக புகைப்பவர்கள் தான் இதனால் பெரிதும் பாதிக்கின்றனர். ஒரு எல்லையை தாண்டி புகைத்தல் மலட்டு தன்மை ஏற்படலாம்.
ஆரோக்கியமான விந்தணுக்களுக்கு நகரும் தன்மை இருக்க வேண்டும்.
 
ஆனால் புகை பிடிப்பது விந்தணுக்களின் நகரும் தன்மையை பாதிக்கிறது. புகைப்பதால் டி.என்.ஏ சிதைகிறது. ஆதலால் இந்த விந்தணுக்களினால் பிறக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நல்ல விஷயம் என்னவென்றால் புகைப்பதை நிறுத்தினால் விந்தணுக்கள் பழய நிலைக்கு வந்து விடும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும். வைட்டமின்கள் ஈ மற்றும் சி நிறைந்த உணவுகளை ( காய்கறிகள் மற்றும் பழங்கள் ) உட்கொள்வதால் விந்தணுக்கள் தன்மை மேம்படுகிறது. எப்போதாவது மது அருந்துவதால் விந்தணுக்களில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஆனால் தினந்தோறும் மது குடித்தால் நிச்சயமாக விந்தணுக்கள் எண்ணிக்கை மற்றும் தரம் பாதிக்கப்படும். மது குடிப்பதை நிறுத்த முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, குறைத்துக்கொள்ளுங்கள். வாரத்திற்கு ஒரு முறை அளவுக்கு மீறாமல் குடிப்பது பரவாயில்லை. உண்மை தான், சூடான நீர் விந்தணுக்களை பாதிக்கிறது. ஆணுறுப்பு சூடான நீரில் படும்போது மலட்டுத் தன்மைக்கு வழி வகுக்கிறது. ஆனால் இது தற்காலிகமான மலட்டு தன்மை தான்.
ஒரு நாளைக்குள் சரியாகிவிடும். தினமும் வெந்நீரில் குளிப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள், இல்லையென்றால் நிரந்தர மலட்டுத் தன்மை ஏற்படலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.. 

LEAVE A REPLY