ஜான்பாண்டியன் கட்சி நிர்வாகி குடந்தையில் கொலை ஏன்?

265
Spread the love

கும்பகோணம் குப்பம்குளத்தை சேர்ந்தவர்  வக்கீல் காமராஜ். இவர் ஜான்பாண்டியனின் தமிழக முன்னேற்ற கழகத்தில் நகர செயலாளராக உள்ளார். உடல்நலம் சரியில்லாத தனது தந்தை பார்த்திபனை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்ற காமராஜ், நேற்று மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது இவரது இருசக்கர வாகனத்தை வழிமறித்த மர்ம நபர்கள் காமராஜை சரமாரி கொலை செய்தனர். அவரது தந்தை பார்த்திபனை  அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதனிடையே காமராஜின் வீட்டிற்கு சென்ற இந்த மர்ம கும்பல் அவரது நண்பர் சக்திவேலையும் படுகொலை செய்துள்ளது. ஒரே நாளில் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி முன்பு வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து இந்த இரட்டைக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நாச்சியார்கோவில் போலீசார் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். காமராஜுக்கும் , அவரது உறவினர் கண்ணன். ராஜவேலுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. கடந்த 8ம் தேதி இருதரப்பினருக்கும் தகறாறு ஏற்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் காமராஜ் மற்றும் சக்திவேல் இருவரும் கொலை செய்யப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். 

LEAVE A REPLY