ரஜினியை தாக்கும் அமைச்சர்கள்… எடப்பாடி போட்ட உத்தரவு ?

396

கடந்த 20ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சர்கள் முக்கியமானவர்கள் 8 பேரை அழைத்து பேசியிருக்கிறார். அந்த முக்கியமானவர்கள் லிஸ்ட்டில் ஓபிஎஸ் இல்லாதது தான் ஹைலைட்.. இந்த கூட்டம் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்திருக்கிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் வெளிப்பாடு தான் ரஜினியை திடீரென அதிமுக அமைச்சர்கள் தாக்கு ஆரம்பித்திருக்கின்றனர் என்கிறார் மூத்த நிர்வாகி ஒருவர். அவர் மேலும் கூறுகையில் அதிமுகவை விட்டு விலக பாஜ ஆரம்பித்திருக்கிறது.  குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இல்லாத ஒரு கூட்டணியை அமைக்க பாஜ முடிவு செய்து இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஊழல் வழக்குகளில் உள்ள தமிழக அமைச்சர்கள் மீது கை வைக்க பாஜ முடிவு செய்திருக்கிறது. இதன் முதல் பலியாக சுகாதாரத்துறை அமைச்சர் இருக்கலாம்.. பாஜவின் இந்த திட்டத்தை தெரிந்து கொண்டிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாஜ நம்மை அடிக்க முடியும் முன்பு நாம் அவர்களை அடிக்க ஆரம்பித்திட வேண்டும். பாஜவை தாராளமாக விமர்சனம் செய்யுங்கள் என பச்சை கொடி காட்டிய எடப்பாடி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பாஜவை விமர்சியுங்கள் என்றும் கூறியிருக்கிறது. இதன் காரணமாக பெரியார் பெயரை சொல்லி ரஜினியை தாக்க ஆரம்பித்திருக்கிறார்கள் அமைச்சர்கள் என்கிறார் அந்த நிர்வாகி.  

LEAVE A REPLY