11,12ல் அதிமுக நேர்காணல்

214
Spread the love

அதிமுகவில் கடந்த 4ம் தேதி முதல் மக்களவை தேர்தலில் போட்டியிட கட்சியினரிடம் விருப்ப மனு பெறப்பட்டது. தமிழகம்,புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் மொத்தம் 1,500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு அளித்தனர்.

இந்நிலையில் அதிமுக தலைமைக் கழகம் சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவை தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேர்காணல் நடைபெறும். இதில் 11ம் தேதி 20 தொகுதிகளுக்கும், 12ம் தேதி 19 தொகுதிகளுக்கும் நேர்காணல் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY