அபிநந்தனுக்கு மீண்டும் போர் விமானம்… விமானப்படை தளபதி பேட்டி..

272
Spread the love

கோவை மாவட்டம், சூலூர் விமானப்படை தளத்தில் இன்று இந்திய விமானப்படை தளபதி பி.எஸ்.தனோவா அளித்த பேட்டி: விங்.கமாண்டர் அபிநந்தனுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. போர் விமானத்தை இயக்க உடல் தகுதி அவசியம். அபிநந்தன் உடல் தகுதி பெற்றதும் போர் விமானத்தை இயக்க அனுமதிக்கப்படுவார். தாக்குதலுக்கு பயன்படுத்திய மிக் 21 பைசல் விமானம் மேம்படுத்தப்பட்டதாகும். இதில் ரேடார் , ஏவுகணை மற்றும் ஆயுதங்கள் இணைத்து பயன்படுத்த முடியும். இந்த விமானத்தை கொண்டு குறிப்பிட்ட தீவிரவாத முகாம் இலக்கை தாக்கினோம். தாக்குதலில் எவ்வளவு பேர் பலியானார்கள் என்பதை விமானப்படை கணக்கெடுப்பது இல்லை. பலி குறித்து மத்திய அரசுதான் விளக்கம் அளிக்கவேண்டும். நாங்கள் தாக்குதல் நடத்தியதால்தான் இம்ரான் கான் இதுகுறித்து பதில் அளிக்கிறார் என்றார். விமானப்படை தாக்குதலுக்கு பிறகு  முதல்முறையாக விமானப்படை தளபதி பேட்டி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY