விபத்தில் சிக்கிய ”அஜித்” கோலிவுட்டில் பரபரப்பு….

392

சென்னையில் அஜித் சூப்பர் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளை படமாக்கியுள்ளனர். அப்பொழுது அஜித் பைக்கில் இருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாம். இருப்பினும் அஜித் அதை எல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டாராம்.

ஐரோப்பாவில் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகளை ஷூட் செய்ய உள்ளார் வினோத். அந்த காட்சிகளில் அஜித் நிச்சயம் டூப் போட விட மாட்டார். அவருக்கு மீண்டும் காயம் ஏற்படாமல் இருக்க வேண்டுமே என்பது தான் ரசிகர்களின் கவலை. அஜித்தால் வலிமை படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் வினோத் அவர் மீது அதிருப்தியில் உள்ளதாகவும் ஒரு தகவல் தீயாக பரவியது. விசாரித்துப் பார்த்ததில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்தது. படப்பிடிப்பு என்னவோ விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆனால் அஜித்தின் ஹீரோயின் யார், வில்லன் யார் என்று எந்த தகவலையும் வெளியிடுவேனா என்று அடம் பிடிக்கிறார் வினோத். போனி கபூர் தயாரிக்கும் வலிமை படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY