6 மாநிலங்களில் குண்டு வைக்க ‘அல் ஹண்ட்’ சதி.. போலீசார் அதிர்ச்சி

251

களியக்காவிளை எஸ்ஐ வில்சன் சுட்டுக்கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டவரும், தீவிரவாத அமைப்பான அல் உம்மாவின் தலைவனுமாக இருந்த மெகபூப் பாஷா (45) என்பவரை பெங்களூரு எஸ்ஜி பாளையில் போலீசார் கைது செய்தனர். இவரது கூட்டாளிகள் முகம்மது மன்சூர், ஜபீபுல்லா, அஜ்மத்துல்லா ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் ஐஎஸ் தொடர்புகள் விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல் சமீம், தவுபிக் ஆகியோருக்கு துப்பாக்கி சப்ளை செய்த இஜாஸ் பாஷா என்பவர் மெகபூப் பாஷாவின் சகோதரர். இவர் குண்டல்பேட்டையில் உள்ள மதரசாவில் வைத்து அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரின் அறிமுகம் மெகபூப் பாஷாவிற்கு கிடைத்துள்ளது. இதற்கு இஜாஸ் பாஷா உதவியுள்ளார். இதனிடையே,  பெங்களூருவில் கைதான முகம்மது  ஹனீப்கான், இம்ரான்கான், முகமது செய்யது ஆகியோரை 10 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் எங்களுடைய தலைவர் மெகபூப் பாஷா (30), தமிழகத்தில் காஜாமொகீதின் என்பவர் தலைமையில் அல்-ஹண்ட் என்ற அமைப்பை உருவாக்கி குடியரசு தினத்தன்று தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய 6 மாநிலங்களில் ஒரே நேரத்தில் பெரிய அளவில் வெடிகுண்டு வெடிக்க வைக்க திட்டம் தீட்டி 17 பேர் கொண்ட ஒரு குழுவை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளனர். 

.

LEAVE A REPLY