சோனியா உத்தரவு.. இன்று ஸ்டாலினை சந்திக்கிறார் அழகிரி

1194

உள்ளாட்சியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர்கள் பதவிகள் வழங்கப்படவில்லை என்றும் கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லை என்றும் தமிழக காங் தலைவர் கேஎஸ் அழகிரி காட்டமாக அறிக்கை வெளியிட்டார். இதன் வெளிப்பாடாக தலைவர் மற்றும் துணைத்தவைர் தேர்தலில் திமுக தோல்வியடைய காங்கிரஸ் காரணமாகியது. இதன் எதிரொலியாக சோனியாக நடத்திய குடியுரிமை சட்டம் குறித்த ஆலோசனை கூட்டத்தை திமுக புறக்கணித்தது. தொடர்ந்து திமுகவின் டிஆர்பாலு, துரைமுருகன் ஆகியோர் காங்கிரசுக்கு எதிராகவும், கார்த்திக் சிதம்பரம், மாணிக் தாகூர் ஆகியோர் திமுகவிற்கு எதிராகவும் கருத்து வெளியிட்டனர். இத்தகயை சூழ்நிலையில் சோனியா காந்தியின் உத்தரவின்படி காங் தமிழக தலைவர் கேஎஸ் அழகிரி நண்பகல் 12 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்திக்கிறார். சோனியாவின் இந்த முடிவு தமிழக காங்கிரசுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

LEAVE A REPLY