மதுரைக்கு வரும் மோடியுடன் கைகுலுக்குகிறார் அழகிரி?

246
Spread the love

கருணாநிதியின் மறைவிற்கு பின்னர் திமுகவில் தனக்கு முக்கியத்துவம் இருக்கும்என எதிர்பார்த்திருந்த அழகிரி ஏமாந்து போனார். திமுகவில் தனக்கென ஒரு ஒரு கூட்டத்தை ஏற்படுத்தும் அவருடை முயற்சியும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் தான் ரஜினி ஆரம்பிக்க உள்ள புதிய கட்சியில் அழகிரி சேருவார் என தகவல் வெளியானது. ரஜினியை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தலின் போது தான் புதிய கட்சி என்ற நிலைக்கு வந்து விட்டதால் அரசியலில் இருந்து விலகியிருக்கும் அழகிரியின் அடுத்த மூவ் என்ன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந் நிலையில் ஜனவரி மாதம் 27ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பிரச்சாரத்தை துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்று  அவர் ரஜினியை  சந்திப்பார் என்றும் பாஜக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அன்று மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. அதிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அப்போது அழகிரி மோடியை சந்தித்து பாஜகவில் சேருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில்  சென்னை விமான நிலையத்தில் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.,வில் அழகிரி இணைகிறாரா என்பது குறித்து தனக்கு எந்த தகவலும் வரவில்லை. பெட்ரோல், டீசல் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றார்.

LEAVE A REPLY