நான் முதல்வரா? உத்தவ் நெகிழ்ச்சி

114

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருப்பதாவது; மராட்டிய மாநில முதல்வராக நான் பதவி ஏற்பேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. இதற்காக நான் சோனியாவுக்கும், சரத்பவாருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
30 ஆண்டாக எங்களுடன் நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை புரிந்து கொள்ளவில்லை. ஆனால் 30 ஆண்டாக நாங்கள் யாரை எதிர்த்து அரசியல் செய்து வந்தோமே அவர்கள் நண்பர்களாக மாறி இருக்கிறார்கள். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட நாங்கள் ஒன்றுபட்டு இருக்கிறோம்.
என் மீது காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். பாஜ கூட என் மீது இந்த அளவுக்கு நம்பிக்கை வைத்தது இல்லை. அவர்கள் என்னுடன் வெறுப்பு அரசியல்தான் நடத்தினர். தேவை ஏற்படும்போது மட்டும்தான் பாஜ என்னை பயன்படுத்திக் கொண்டது. எங்களது நட்பையும், தேவையையும் அவர்கள் எப்போதுமே உதாசீதனம் தான் செய்து வந்தார்கள். எனது தலைமையிலான அரசு முன்னுதாரணமான அரசாக அமையும். நான் தனிப்பட்ட முறையில் யார் மீதும் பழிவாங்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என்றார்.

LEAVE A REPLY