13ம் தேதி தமிழக பட்ஜெட்..?

232
Spread the love

தமிழக சட்டசபை கூட்டம் கடந்த மாதம் 21-ந்தேதி கவர்னர் உரையுடன் துவங்கியது. அதன் பிறகு 3 நாட்கள் சட்டசபை நடைபெற்றது. தொடர்ந்து 24-ந்தேதியுடன் சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு பட்ஜெட் தயாரிப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு துறைகளின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.இதைத் தொடர்ந்து நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.   இந்த கூட்டத்தில் நிதி நிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் வரும் 13-ந்தேதி பட்ஜெட்டும், 16-ந்தேதி வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  வருகிற 15-ந்தேதி சுதந்திர தினத்தையொட்டி கோட்டையில் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற பிறகு மான்ய கோரிக்கைள் மற்றும் பட்ஜெட் குறித்த விவாதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. 

LEAVE A REPLY