நடிகை அமலா பாலின் தந்தை மரணம்…

72
அமலா பாலின் தந்தை பால் வர்கீஸ்  உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வர்கீஸ் (வயது 61) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   
அவரின் இறுதிச் சடங்கு இன்று மதியம் 3 மணி முதல் மாலை 5 மணிக்குள் குருப்பம்பாடியில் உள்ள புனித பீட்டர் மற்றும் புனித பால் தேவாலயத்தில் நடைபெற உள்ளது. அமலா பால்  தகவல் அறிந்தவுடன் கேரளாவுக்கு கிளம்பிச் சென்றார். தந்தையை இழந்து வாடும் அமலா பாலுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தனர்.View image on Twitterஅமலா நடிகையாக விரும்பியபோது அதை அவரின் தந்தை கடுமையாக எதிர்த்தார். ஆனால் அமலா தன் மனதை மாற்றிக் கொள்ளாததால் வர்கீஸ் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார். அமலாவுக்கு அவரின் தம்பி அபிஜித் ஆதரவாக இருந்தார். பின்னர் அபிஜித்தும் நடிக்க வந்துவிட்டார். தற்போது அமலா தான் அவரின் அம்மா ஆனீஸுக்கு ஆறுதலாக இருக்கிறார்.

LEAVE A REPLY