அமர்சிங் காலமானார்

203
Spread the love

ராஜ்யசபா எம்.பி.,யும், சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் நிர்வாகியுமான அமர்சிங் (64)  சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில மாதங்களாக, கிட்னி தொடர்புடைய பிரச்னைகள் காரணமாக, சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 2011 ல் அமர்சிங்கிற்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சமாஜ்வாதி கட்சி தலைவராக முலாயம் சிங் இருந்த வரை, அவருக்கு நெருக்கமானவராக அமர்சிங் இருந்தார். பின்னர் கட்சி, அகிலேஷ் வசம் சென்றதும், அமர்சிங் ஓரங்கட்டப்பட்டார். தொடர்ந்து 2010ல் சமாஜ்வாதியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். பின்னர் 2011ல் ராஷ்ட்ரீய லோக் மஞ்ச் என்ற கட்சியை துவக்கி, 2012 சட்டசபை தேர்தலில் களம் கண்டார். ஆனால், தோல்விதான் அவருக்கு பரிசாக கிடைத்தது. இதன் பின்னர் அஜித் சிங் கட்சியுடன் இணைந்து அமர்சிங் செயல்பட்டார்.

 

 

 

LEAVE A REPLY