ஆம்புலன்ஸ் டிரைவர் குத்திக்கொலை…நண்பன் கைது…

126
Spread the love

திருப்பூர், முத்தனம்பாளையம், பாலாஜி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (25), இவருக்கு திருமணமாகி மகன் உள்ளார். இவர் திருப்பூர் அரசு தலைமை ஆஸ்பத்திரி முன்பு தனியார் ஆம்புலன்ஸ் டிரைவராக உள்ளார். அதே பகுதியில் மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவாக உள்ள விக்னேசின் நண்பர் மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த அசோக்குமார் (23). இந்நிலையில் நேற்று இரவு 2 பேரும் சரக்கு அடித்துள்ளனர். அப்போது விக்னேஷ் ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்ததாக தெரிகிறது. இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விக்னேசின் கழுத்து பகுதியில் சரமாரியாக குத்தியதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

தகவலறிந்த தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து கொலை வழக்கு பதிவு செய்து அசோக்குமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆம்புலன்ஸ் டிரைவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY