அமெரிக்காவில் ஓய்வெடுக்கச் செல்லும் ரஜினி….

92
Spread the love

நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தை முடித்துக்கொடுத்துவிட்டு விரைவில் அமெரிக்கா செல்லவிருக்கிறார். இதற்காக அவர் ஐதராபாத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருக்கிறாது. படப்பிடிப்பு முடிந்தும் சென்னை திரும்பும் ரஜினி, அப்படத்தின் டப்பிங் பணிகளை ஒரே கட்டமாக முடித்துவிடவும் திட்டமிட்டிருக்கிறார்.

அமெரிக்காவில் ஓய்வெடுக்கச் செல்லும் ரஜினி!

இதையடுத்து அவர் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ரத்த அழுத்த மாறுபாட்டுக்கான சிகிச்சைகளை செய்திருக்கும் ரஜினிகாந்துக்கு மேற்கொண்டு உடல் பரிசோதனைகள் செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளன. இதனால், அமெரிக்கா செல்லும் ரஜினி, சிகிச்சை முடிந்த பின்னர் அமெரிக்காவில் சில காலம் ஓய்வெடுக்க முடிவு செய்திருக்கிறார். இதன் பின்னர் சென்னை திரும்பியதும் அடுத்த படத்திற்கான வேலைகளை துவங்கவும் அவர் திட்டமிட்டிருப்பதாக தகவல் வௌியாகியுள்ளது.

LEAVE A REPLY