அமெரிக்காவில் சிக்கிய இந்திய மாணவர்களுக்கு ஹாட்லைன் வசதி

163
Spread the love
அமெரிக்காவில் உயர்கல்வி படிக்க விரும்பும் பிற நாடுகளை சேர்ந்த மாணவர்கள் அங்குள்ள பல்கலைக்கழகங்கள் மூலம் கல்வி விசா பெறுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தநிலையில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள பார்மிங்டன் நகரை சேர்ந்த சிலர் போலியாக பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்தியா உள்பட வெளிநாடுகளை சேர்ந்த 600 பேருக்கு கல்வி விசா வாங்கி கொடுத்தனர். இந்த விசா மோசடி தொடர்பாக, போலி பல்கலைக்கழகத்தை நடத்தி வந்த இந்தியர்கள் 8 பேரை போலீசார் கைது செய்தனர். நேற்று மேலும் வெளிநாட்டு மாணவர்கள் 130 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 129 பேர் இந்திய மாணவர்கள் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள இந்திய மாணவர்களுக்கு உதவி செய்வதற்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் பிரத்யேக (ஹாட்லைன்) தொலைபேசி எண் கொடுத்துள்ளது. 24 மணி நேரமும்  செயல்படும் இந்த தொலைபேசி வசதியில் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 202-322-1190 மற்றும் 202-340-2590  ஆகிய இரண்டு எண்களை இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. அதேபோல், கைது செய்யப்பட்ட மாணவர்கள், மாணவர்களின் நண்பர்கள், உறவினர்கள் cons3.washington@mea.gov.in. என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

LEAVE A REPLY