கார் வாங்க போறேன்.. போலீசை தெறிக்கவிட்ட அமெரிக்க சிறுவன்

109
Spread the love

அமெரிக்காவின் உதா மகாணத்தில் உள்ள ஆக்டனில் 115 கி.மீ. வேகத்தில் கார்கள் செல்ல வேண்டிய சாலையில் 50 கிமீ வேகத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதனை கவனித்த போலீசார் அதனை கண்காணிக்க ஆரம்பித்தனர். ஒரு வளைவில் கார் ஒரு தடுப்பில் மோதி நின்றது. உடனே போலீசார் அவசர அவசரமாக சென்று பார்த்து திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தனர். சுமார் 5 வயது சிறுவன் காரை ஓட்டி வந்துள்ளான். எங்கேப்போகிறாய் என போலீசார் கேட்டனர். கார் வாங்க போய்க்கொண்டிருக்கிறேன். என்னை டிஸ்டப் பண்ணாதீங்க என கூறினான். எந்த கார் என அவர்கள் கேட்டனர். எங்கள் வீட்டில் லம்போகினி தான் (6கோடி ) எங்கள் வீட்டில் இல்லை. அதை தான் வாங்க போய்க்கொண்டிருக்கிறேன் என்றார். பணம் எங்கே? எனபோலீசார் கேட்க, தன்னிடம் இருந்த 3டாலரை ( 228 ரூபாய்) காட்டினான்.  அதிர்ச்சியடைந்த போலீசார் நாங்கள் வாங்கிக்தருகிறோம் என சமாதானம் செய்து அவனை கீழே இறக்கி பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.. 

LEAVE A REPLY