சிறுவனுக்கு நிர்வாணப்படம்.. அமெரிக்க அழகிக்கு 2 ஆண்டு சிறை

178
Spread the love

அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியா- கனாவா கவுண்டியில் இருக்கும் ஆண்ட்ரு ஜாக்சன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் ரம்சே கார்பென்டர் பியர்ஸ் (29). கடந்த 2014-ஆம் ஆண்டு மிஸ் கென்டக்கி பட்டம் வென்றவர். கென்டக்கி யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்றுள்ளார்.

திருமணமான இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு திடீரென்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். முன்னாள் அழகியாக இருந்த இவரின் கைது அப்போது, ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது

அதன் பின் விசாரணையில், இவர் பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.இதையடுத்து குறித்த மாணவனின் போனை பெற்றோர் எதிர்பாரதவிதமாக பார்த்த போது, அதில் ரம்சேயின் நான்கு மேல் ஆடை இல்லாத புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதை அவர் சமூகவலைதளமான ஸ்நாப் சாட் மூலம் மாணவனுக்கு அனுப்பியுள்ளார். இது குறித்து நடந்து வந்த விசாரணையில், அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 

LEAVE A REPLY