காங்-திமுக ஊழல் பற்றி பேசக்கூடாது.. அமித்ஷா காட்டம்..

227
Spread the love

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது……. உலகின் தொன்மையான தமிழ் மொழியில் பேச முடியாதது வருத்தம் அளிக்கிறது.மாநிலங்களிடையே நல்லாட்சி என்ற போட்டியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. நீர் பாதுகாப்பு, நீர் விநியோகம் நிர்வகிப்பில் தமிழகம்தான் இந்த ஆண்டு முதலிடம் பெற்று உள்ளது. அதே போல தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கிடையேயான போட்டியில் இரண்டு மாவட்டங்கள் முன்னிலை பெறுகிறது. ஒன்று வேலுார், மற்றொன்று கரூர். அனைவருக்கும் வீடு என்ற இலக்கை 2022ஆம் ஆண்டிற்குள் அடைவோம். தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சிக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். தமிழகத்திற்கு மத்திய அரசு அநீதி இழைத்து வருகிறது என்று திமுக கூறி வருகிறது. ஆனால் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்து திமுக தமிழகத்திற்கு என்ன செய்தது? கொரோனா கால கட்டத்தில் 4500 கோடி ரூபாய் நேரடியாக மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு உள்ளது. மன்மோகன் அரசை காட்டிலும், மோடி அரசு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கி உள்ளது. தமிழக மக்களின் தோளோடு தோளாக மத்திய அரசு உறுதுணையாக நிற்கும். நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னைக்கு வந்துள்ளதால் அரசியல் பேசுவேன். மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்றுக்கு எதிராக போர் தொடுத்துள்ளார். ஊழல், குடும்ப அரசியல், சாதீய அரசியலுக்கு எதிராக அவர் போர் புரிகிறார். மத்தியில் குடும்ப அரசியலுக்கு மக்கள் பாடம் புகட்டி கொண்டிருக்கிறார்கள். தமிழக மக்களும் குடும்ப அரசியலுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். ஊழலை பற்றி பேசுவதற்கு காங்கிரஸ் திமுகவிற்கு என்ன அருகதை இருக்கிறது. ஊழல் குற்றச்சாட்டு கூறும்முன் உங்களது குடும்பத்தை திரும்பி பாருங்கள். தமிழக மீனவர்கள் அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள் இவ்வாறு அமித்ஷா பேசினார்.. 

LEAVE A REPLY