கர்நாடக வெள்ள பாதிப்பு பகுதிகளில் அமித்ஷா!

130
Spread the love
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பணிகளை கவுரவிக்கும் வகையில் சென்னையில் இன்று புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புத்தகத்தை வெளியிட்டார். 
 
இவ்விழாவில் பங்கேற்க அமித்ஷா நேற்று இரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. கிண்டி ராஜ்பவனில் தங்கிய அமித்ஷாவை, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். இந்நிலையில், சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அமித்ஷா, இன்று கர்நாடகா மாநிலத்துக்கு சென்று அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெலகாவி மாவட்டத்தில் சேதப்பகுதிகளை பார்வையிடுகிறார்.

LEAVE A REPLY