20 தொகுதிகளில் குக்கரால் பாதிக்கப்பட்ட “இரட்டைஇலை”….

638
Spread the love

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் டிடிவியின் அமமுக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.. அதே சமயம் சுமார் 20 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றியை அவர்கள் பறித்துள்ள விபரம் தற்போது வெளியாகியுள்ளது.. இதன்படி.. 

1. கடலுார் மாவட்டம், நெய்வேலி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், 977 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில், அ.ம.மு.க., வேட்பாளர், 2,230 ஓட்டுகளை பெற்றார்

2. காட்பாடி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், 748 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அந்த தொகுதியில், அ.ம.மு.க., 1,040 ஓட்டுகளை பெற்றது.

3.  விருத்தாசலம் தொகுதியில், காங்., வேட்பாளர், 862 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு, அ.ம.மு.க., கூட்டணியில் இடம் பெற்ற தே.மு.தி.க., 26 ஆயிரத்து, 908 ஓட்டுகளை பெற்றது

4. காரைக்குடியில், காங்., வேட்பாளர், 21 ஆயிரத்து, 589 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அங்கு அ.ம.மு.க., 44 ஆயிரத்து, 864 ஓட்டுகளை பெற்றது

5. நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ், 15 ஆயிரத்து, 363 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு அ.ம.மு.க., 30 ஆயிரத்து, 596 ஓட்டுகளைப் பெற்றது

6. ராஜபாளையத்தில், தி.மு.க., வேட்பாளர், 3,789 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 7,623 ஓட்டுகளைப் பெற்றது

7. மயிலாடுதுறையில் காங்கிரஸ், 2,747 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அங்கு அ.ம.மு.க., 7,282 ஓட்டுகளை பெற்றது

8. திருமயத்தில், தி.மு.க., 919 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 1,426 ஓட்டுகளை பெற்றது

9. கந்தர்வகோட்டையில், மா.கம்யூ., 12 ஆயிரத்து, 721 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 12 ஆயிரத்து, 840 ஓட்டுகளைப் பெற்றது

10.  பாபநாசம் தொகுதியில், மனிதநேய மக்கள் கட்சி, 16 ஆயிரத்து, 273 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு, அ.ம.மு.க., 19 ஆயிரத்து, 778 ஓட்டுகளை பெற்றுள்ளது

11. மன்னார்குடியில் தி.மு.க., 37 ஆயிரத்து, 393 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 40 ஆயிரத்து, 481 ஓட்டுகளைப் பெற்றது

12. ஆண்டிப்பட்டியில், தி.மு.க., 8,538 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 11 ஆயிரத்து, 896 ஓட்டுகளைப் பெற்றது.

13.உத்திரமேரூரில், தி.மு.க., 1,622 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கு அ.ம.மு.க., 7,211 ஓட்டுகளைப் பெற்றது.

14. திருவாடானை தொகுதியில், காங்கிரஸ் கட்சி, 13 ஆயிரத்து, 316 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அ.ம.மு.க., 32 ஆயிரத்து, 74 ஓட்டுகளைப் பெற்றது.

15. வாசுதேவநல்லுார் தொகுதியில், ம.தி.மு.க., 2,367 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 13 ஆயிரத்து, 376 ஓட்டுகளைப் பெற்றது.

16. சாத்துாரில், ம.தி.மு.க., 11 ஆயிரத்து, 179 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 32 ஆயிரத்து, 916 ஓட்டுகளைப் பெற்றது.

17. சங்கரன்கோவிலில், தி.மு.க., 5,354 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 22 ஆயிரத்து, 676 ஓட்டுகளைப் பெற்றது.

18. தென்காசியில் காங்கிரஸ், 370 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 9,944 ஓட்டுகளை பெற்றது.

19. திருப்போரூரில், வி.சி.க., 1,947 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க., 7,662 ஓட்டுகளை பெற்றது.

20. சென்னை தி.நகரில், தி.மு.க., 137 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, அ.ம.மு.க.,782 ஓட்டுகளை பெற்றிருந்தது.

LEAVE A REPLY