அன்பில் மகேஷ் உறுதியாக இருக்கின்றார் திடமாக இருக்கின்றார் சேகர் பாபு
நீதிமன்ற உத்தரவின் படி உணவு வழங்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் சேகர்பாபு புழல் சிறையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்தபின் பதில்
தனியார் பள்ளிகளுக்கு அரசு அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி பணம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த மாதம் 26ஆம் தேதி கைது செய்யப்பட்டு சென்னை ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் 5நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் கடந்த 2ஆம் தேதி 3நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனையடுத்து கடந்த 3நாட்களாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க 100 கோடி ரூபாய் பணம் பெறப்பட்டதாக அளிக்கப்பட புகார் தொடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டு அவை அனைத்திற்கும் அன்பில் மகேஷ் அளித்த பதில்கள் வீடியோ பதிவு செய்யப்பட்டன. 3நாட்கள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டு, விசாரணைக்கு பின் அன்பில் மகேஷை 6ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீண்டும் புழல் சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் புழல் சிறையில் முன்னாள் இந்து அறநிலைத்துறை அமைச்சரும், துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பி கே சேகர் பாபு அன்பில் மகேஷ் பொய்யா மொழியை சந்தித்து நலம் விசாரித்து, தரமான உணவுகள் வழங்கப்படுகிறதா..? நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, சிறையில் வழங்கப்படும் உணவு குறித்த கேள்விக்கு நீதிமன்ற உத்தரவுப்படி உணவு வழங்கப்படுவதாக சேகர் பாபு தெரிவித்துவிட்டு சட்டென காரில் ஏறி புறப்பட்டார்
புழல் சிறையில் அன்பில் மகேஷ் உறுதியாக உள்ளார் திடமாக உள்ளார் என ரமேஷ் சேகர் பாபு கூறினார்.
