‘கைவைத்தது’ யார்? .. சென்னை போலீசில் பரபரப்பு

274

சென்னை அண்ணா சாலை போலீஸ் நிலையம் இரண்டு தளங்கள் கொண்டது. இதில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீசார் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் தான் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் உள்ளது. சனிக்கிழமை அன்று மகளிர் போலீஸ் நிலையத்தில் ரைட்டர் அறையில் உள்ள பணப்பெட்டி திறக்கப்பட்டு அதில் இருந்த 10 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டிருப்பது இருப்பது போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ஜம்பு ராணி, பிரேமா ஆகிய போலீசார் மட்டுமே பணியில் இருந்துள்ளனர். இதே போல் இரவு பணியில் வளாகம் முழுவதிலும் உள்ள  போலீஸ் நிலையங்களிலும் போலீசார் இருந்துள்ளனர். வளாகம் முழுவதிலும் சிசிடிவி கேமிரா இருந்தும் சம்மந்தப்பட்ட இடத்தில் உள்ள கேமிரா பதிவு காட்சிகள் தெளிவாக இல்லாததால் பணத்தை எடுத்தது யார்? என்பது தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY