அண்ணாமலைக்கு பதில் அளிப்பாரா… தயாநிதி மாறன் ?.

209
Spread the love

மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு அனுமதி வழங்கக்கூடாது என்பதனை வலியுறுத்தி தஞ்சையில் உண்ணாவிரத போராட்டத்தை தமிழக பா.ஜ. நடத்துகிறது..  தமிழக பா.ஜ., போராடினாலும், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். 
இது தொடர்பாக,  எம்.பி., தயாநிதி மாறனிடம் கேட்டபோது, இந்த பிரச்னையில் சுமுக தீர்வு காண, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை துாதுவராக அனுப்புவோம்’ என்று பதில் அளித்திருந்தார்.

உடனே தயாநிதி மாறனுக்கு அண்ணாமலை, டுவிட்டரில்….கொரோனா தொற்று பாதிப்பில் மக்கள் துன்புற்று இருந்த போது, ‘டி – 20’ கிரிக்கெட் போட்டிகளை ரசித்து கொண்டிருந்தார் தயாநிதி. எப்படியோ மேகதாது அணை பற்றி கவலைப்பட்டதற்கு நன்றி.கூடவே, சிறப்பு விமானம் ஒன்றை தயாநிதி அனுப்பி வைத்தால், தமிழகத்தின் ஏழை விவசாயிகளை அழைத்துக் கொண்டு, கர்நாடகாவுக்கு துாது செல்ல தயாராக இருக்கிறேன். இதை,தயாநிதியின் மாமா முதல்வர் ஸ்டாலின்அனுமதிப்பாரா? என குறிப்பிட்டுள்ளார்.. அண்ணாமலையின் இந்த டிவிட்டருக்கு பதில் அளிப்பாரா? என்கிற கேள்வி தமிழக அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.. 

LEAVE A REPLY