திருச்சி மாவட்டம் முசிறியில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் முசிறி காவல்துறை சார்பில் நடைபெற்ற போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணிக்கு முசிறி போலீஸ் டிஎஸ்பி சச்சிதானந்தம் தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
.முசிறி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் முன்னிலை வகித்து மாணவ மாணவிகள் மத்தியில் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து சிறப்புரையாற்றினார்
.முசிறி கை காட்டில் துவங்கிய பேரணி முசிறி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று முசிறி புதிய பேருந்து நிலையத்தில் முடிந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிராகவும் , போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும்,

கோஷம் எழுப்பியவாறு சென்றனர்.நிகழ்வில் முசிறி எம் ஐ டி கல்லூரி மாணவ மாணவிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக பேரணிக்கு வருகை தந்தவர்களை முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பல்தசார் வரவேற்றார்.
நிறைவில் எம்ஐடி கல்லூரியின் நிர்வாக அதிகாரி பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
