ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர முடியாது… நிர்மலா அதிரடி!

165
Spread the love

ஆந்திராவிலிருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த பிறகு ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலின்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனது  தேர்தல் அறிக்கையில் ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வாங்கித் தரப்படும் என்று வாக்குறுதி அளித்தது.

இந்நிலையில் நேற்று மக்களவையில் இது குறித்து கேட்ட  கேள்விக்கு  நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அளித்த பதில்: தற்போது எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான முடிவுகளை மத்திய அரசு எடுக்கவில்லை. மேலும் சிறப்பு அந்தஸ்து பெற ஒரு மாநிலத்தின் நிலம் முதல் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மலை முகடுகள், கடினமான வாழ்வியல் சூழல்கள், குறைவான மக்கள் தொகை / மக்கள் அடர்த்தி, கணிசமான அளவில் இருக்கும் பழங்குடிகளைக் கொண்ட மாநிலங்கள், சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் மாநிலங்கள், பொருளாதார / உள்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியிருக்கும் மாநிலங்கள் என்ற அடிப்படையில் தான் சிறப்பு அந்தஸ்தது ( Special Category Status (SCS)) வழங்கப்படும். தற்போதைக்கு அப்படியான அந்தஸ்து வழங்குவதற்கான முகாந்திரம் ஏதும் இல்லை என்றார் நிர்மலா. இது ஜெகன்மோகன் ரெட்டிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY