அரியலூரில் குட்கா விற்ற 2 பேர் கைது…

42
Spread the love

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் உடையார்பாளையம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2 கடைகளில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, இரு கடைகளில் இருந்தும் குட்கா மற்றும் ஹான்ஸ் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக உடையார்பாளையம் வெள்ள பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த குறலரசன் (24), சந்துரு (55) ஆகியோரை கைது செய்தனர்.

LEAVE A REPLY