அரியலூர் பெருமாள் கோவில்.. புரட்டாசி சனிக்கிழமை பக்தர்கள் அனுமதியில்லை..

81
Spread the love

அரியலுார் கலியுக வரதராஜ பெருமாள் கோவில் மிகவும் பிரசிப்பெற்றது. மூலஸ்தானத்ததில் 12 அடி உயர கம்பத்தினை ஆஞ்சநேயர் தாங்கி கொண்டிருப்பதை போன்ற உருவம் மட்டுமே உள்ளது. இதனையே மூலவராக கருதி பூஜைகள் நடைபெறும். மாறாக பெருமாளுக்கு சிலைகள் ஏதும் இல்லை. சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். இது மிகவும் விசேஷம் என்பதால் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் திரள்வர். கொரோனா பரவல் காலக்கட்டம் என்பதால் சனிக்கிழமைகளில் பக்தர்கள் வருவதற்கு அரியலுாா் மாவட்ட நிர்வாகம் தடை விதித்து உள்ளது. ஆனால் வழக்கம்போல பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. 

LEAVE A REPLY