பொருளாதார மந்த நிலையால் இந்தியாவில் செயல்பட்டு வரும் டொயோட்டோ, ஹூண்டாய் போன்ற கார் தயாரிப்பு நிறுவனங்கள் கடந்த 4 ஆம் தேதி முதல் தங்களது உற்பத்தியை நிறுத்திக் கொண்டுள்ளன. நாட்டில் தற்போது வரை 3.5 லட்சம் பேர் பேர் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாகனங்களின் விற்பனை சரிவடைந்துள்ளது. டொயோட்டோ தனது பெங்களூரு தொழிற்சாலையில் உற்பத்தியை நிறுத்தி விட்டது.

இந்நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனம் தனது சென்னை எண்ணூர் தொழிற்சாலையில் 16 நாட்களும், ஒசூர் 1 மற்றும் 2 ஆவது உற்பத்தி மையத்தில் 5 நாட்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள தனது உற்பத்தி மையங்களில் 18 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்தி தொழிற்சாலைகளை மூடியிருப்பதாக செபியிடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

.

LEAVE A REPLY