அண்ணே 170… தம்பி 132.. குழப்பத்தில் தொண்டர்கள்..

716
Spread the love

கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் மே 2ம் தேதி தான் வாக்கு எண்ணிக்கை என்பது தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் பெரும் சலிப்பை ஏற்படுத்தியிருப்பதோடு தினமும் வெளியாகும் தகவல்கள் குழப்பத்தையும் ஏற்பாடுத்தியிருப்பது உண்மையே..  திமுகவை பொருத்தவரை அடுத்த ஆட்சி நம்முடையது தான் என்பதில் திடமான நம்பிக்கையுடன் உள்ளனர். எப்படியும் கூட்டணி 170யை தாண்டும் என்பது அவர்களின் கணக்காக உள்ளது. மேலும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் செயல்பாடுகள், அவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை சுற்றியுள்ள கிச்சன் கேபினட்டை தொடர்பு கொள்ள முயற்சி மேற்கொண்டிருப்பதும் அவர்களின் நம்பிக்கையை கூடுதலாக்கி வருகிறது.. இதன் அடிப்படையில்  டிஜிபி யார்? தலைமை செயலாளர் யார்? என்பது வரை மேலிடத்தில் பேசப்பட்டு வருகிறது.. அதில் வேடிக்கை என்னவென்றால் உத்தேச அமைச்சரவை பட்டியல் என தினமும் சமூக வளைதளங்களில் ஒரு பட்டியல் வெளியாகி வருகிறது.. இதன் அடிப்படையில் நிர்வாகிகள் கேட்கும் கேள்விகளுக்க பதில் சொல்ல முடியவில்லை என சலித்துக்கொள்கின்றனர் தலைவர்கள்…

அதிமுகவை பொருத்தவரை 130 தொகுதிகளில் வெற்றி என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிகவும் நம்பிக்கையாக உள்ளதாக கூறப்படுகிறது. தன்னை சந்திக்கும் நபர்களிடம் எப்படியும் 132 நமக்கு கிடைச்சுடும் கவலப்படாம போய் ஆகுற வேலைய பாருங்க என நேரடியாக சொல்லி வருகிறாராம் எடப்பாடி. அதேபோல் அதிமுகவின் கோர் கமிட்டி என கூறப்படும் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் கூட தங்களை சந்திக்க வரும் நபர்களிடம் கண்டிப்பாக நாம 132ல ஜெயிக்குறோம். சிஎம்கிட்ட லிஸ்ட் இருக்கு.. கவலைப்படாதீங்க என சொல்லி அனுப்பி வருகின்றனர்.. அவங்களே சொல்றாங்க அப்புறம் என மாவட்ட செயலாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்..

இதில் பாவம் என்னமோ இரண்டு கட்சிகளின் தொண்டர்கள் தான்…போனிலோ நேரிலோ தினமும் பேசிக்கொள்ளும் அவர்களின் உரையாடல் இது தான்… .  ” தம்பி சுனில் ஆட்கள், இன்டெலிஜென்ஸ் என போலிங் அன்னைக்கு எடுத்த சர்வேபடி 132 வின்னிங் லிஸ்ட் எங்க ஆளு கையில வச்சுகிட்டு.. போற எல்லாத்துகிட்டையும் காட்டுறாரு ஆமா…  அண்ணே ஐபேக் இல்லாம வேற 2 கம்பெனிய வச்சு எங்க ஆளுங்க சர்வே எடுத்து இருக்காங்க..  எல்லாத்துலையும் கிட்டத்தட்ட நாங்க இன்டிசுவலா 145… அப்புறம் கூட்டணி எல்லாம் சேத்து 170 தாண்டுதாம்..மந்திரி லிஸ்ட் வந்துருச்சு தெரியுமா? நான் வாட்ஸ் அப்ல அனுப்புறேன் பாருங்க..” என பேசிக்கொண்டிருக்கின்றனர்…  மே 2ம் தேதி வரை தொண்டர்கள் தான் பாவம்… 

LEAVE A REPLY