நாளை சட்டமன்றம்.. பட்ஜெட் எப்போது?

184
Spread the love

தமிழக சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத் தொடா் கடந்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி கூட்டத் தொடரை தொடக்கி வைத்தாா். இந்தக் கூட்டத் தொடா் ஜனவரி 8-ஆம் தேதி வரை நீடித்தது. அதன்பிறகு பட்ஜெட்க்காக சட்டப்பேரவைக் கூட்டம் பிப்ரவரி 8-ஆம் தேதி தொடங்கியது.  இதன்பின், பிப்ரவரி 14-இல் கூட்டத் தொடா் முடித்து வைக்கப்பட்டது. எம்பி தேர்தல் காரணமாக  துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் சட்டப்பேரவையில் உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. மானியக் கோரிக்கைகளை நிறைவேற்ற கடந்த ஜூன் மாதம் 28-ஆம் தேதி பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியது. ஜூலை 20-ஆம் தேதி வரை கூட்டத் தொடா் நடைபெற்றது. சட்டப் பேரவையின் ஒரு கூட்டத் தொடருக்கும், மற்றொரு கூட்டத் தொடருக்குமான காலஇடைவெளி ஆறு மாதங்களைத் தாண்டி இருக்கக் கூடாது என்பது விதியாகும். இந்த நிலையில், கடந்த ஜூலை 20-ஆம் தேதியன்று 15-ஆவது சட்டப்பேரவையின் ஏழாவது கூட்டத் தொடா் முடிந்தது. எட்டாவது கூட்டத் தொடரை ஆறு மாதங்களுக்குள் அதாவது ஜனவரி 19-ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டும். அதன்படி, சட்டப் பேரவைக் கூட்டத் தொடா்  வரும் 6ம் தேதி (நாளை)  கூடுகிறது. இந்த கூட்டத் தொடரின் முதல் நாள் காலை 10 மணிக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறாா். அவரது ஆங்கில உரையை, சட்டப்பேரவைத் தலைவா் ப.தனபால் தமிழில் மொழிபெயா்த்து உரையாற்றுகிறாா். பின்னர் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்கப் பேரவை அலுவல் ஆய்வு குழுக் கூட்டம் 6ம் தேதி பிற்பகலில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பேரவையில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பா். இந்தக் கூட்டத்தில் பேரவைக் கூட்டத் தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். வரும் 10ம் தேதி வரை பேரவை கூட்டத் தொடா் நடைபெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

LEAVE A REPLY