ஐயாவுக்கு அஞ்சலி

312
Spread the love

கடந்த  1951-ம் ஆண்டு திருவனந்தபுரத்தில் தினமலர் தொடங்கப்பட்டபோது ஆர்.ராகவன் ஐயா படிப்பை நிறுத்திவிட்டு தந்தைக்கு துணையாக 1954-ம் ஆண்டு முதல் தினமலர் வரவு, செலவு கணக்கு மற்றும் நிர்வாகத்தை கவனிக்க தொடங்கினார். அதன்பின் திருச்சி பதிப்பின் முழு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றார். தினமலர் நாளிதழுக்கு தமிழகம் முழுவதும் விற்பனை பிரிவை உருவாக்கி மக்கள் மத்தியில் நாளிதழை கொண்டு சென்றதில் ஆர்.ராகவன் ஐயாவுக்கு முக்கிய பங்குண்டு. அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார்.  பத்திரிகை உலகின் பிதாமகன் ஆர்.ஆர். ஐயாவுக்கு,  ‘e தமிழ் நியூஸ்’ முதலாம் ஆண்டு அஞ்சலியை செலுத்துகிறது.

 
 

LEAVE A REPLY